Wednesday, October 7, 2015

விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பு: தொழில்நுட்பப் பயிற்சி



சிவகங்கை அருகே சுந்தரநடப்பில் மண் மாதிரி சேகரிப்பு தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
  இந்த விழிப்பிணர்வு முகாமில், வேளாண் உதவி இயக்குநர் தனபாலன் கலந்துகொண்டு, மண் பரிசோதனை மற்றும் மண்வள அட்டையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அதேபோல், மண் மாதிரிகள் சேகரிப்பு தொழில்நுட்பம், மண்ணில் காணப்படும் பிரச்னைகள், அதற்குரிய தீர்வுகள் குறித்து காணொலி காட்சி மூலம் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் பௌஜியாராணி எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் கமலா ராணி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், ரசாயன உரங்கள் குறித்து விளக்கினார்.
  இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை அலுவலர் லயோலா அன்புக்கரசி, நுண்ணூட்ட சத்து குறைவால் பயிர்களில் ஏற்படும் அறிகுறிகள், அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை காணொலிக் காட்சி மூலம் விளக்கினார்இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை, திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் தம்பித் துரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் பாண்டீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.    இதில், 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2015/10/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A/article3068792.ece

No comments:

Post a Comment