மும்பை,
தூய்மை
இந்தியா திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சாதனை முயற்சி
தூய்மை
இந்தியா திட்டத்தின் கீழ் அதிகளவு பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து லிம்கா, கின்னஸ்
சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில் தனியார் குடிநீர் பாட்டில் நிறுவனம் ஒன்று
ஈடுபட்டது. பழைய பாட்டில்களை சேகரிக்கும் பணியில் மும்பையை சேர்ந்த 100 பள்ளிகளை சேர்ந்த
2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஈடுபட்டனர். பின்னர் மாணவர்கள் சேகரித்த பழைய பாட்டில்கள்
அனைத்தும் எல்பின்ஸ்டன் ரோட்டில் உள்ள காம்கர் விளையாட்டு மைதானத்திற்கு நேற்று கொண்டு
வரப்பட்டது.
20 ஆயிரம் கிலோ பாட்டில்கள்
மாணவர்கள்
சேகரித்த பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் 20 ஆயிரம் கிலோ இருந்தது. இதற்கு முன் 13 ஆயிரத்து
408 கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரித்ததே சாதனையாக இருந்தது. இதன்மூலம் 20 ஆயிரம்
கிலோ பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம்
கிலோவில் ஏறக்குறைய 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
மாணவர்கள் சேகரித்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்ச்சியின் மூலம் தலையணை உறை, தொப்பி,
துணி மற்றும் பை தயாரிக்க பயன்படுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment