Tuesday, July 5, 2016

மானியத்தில் சோலார் பம்பு: விண்ணப்பிக்க அழைப்பு

விவசாயிகளுக்கு, 80 சதவீத மானியத்தில் வழங்கப்படும் சோலார் பம்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் காகர்லா உஷா வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், முதல்வரின் சிறப்பு திட்டமான பாசனத்திற்கான சோலார் பம்புகளுடன் நுண்ணீர் பாசன வசதி திட்டத்தில், 2015-16ம் நிதியாண்டில் ஆழ்குழாய் கிணறு பிரிவில் சோலார் பம்பு செட், 15 அமைக்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் சூரிய ஒளியால் இயங்கும் மின் மோட்டார்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், ஐந்து எச்.பி, 7.5 எச்.பி, மற்றும், 10 எச்.பி., கொண்ட மின் மோட்டார்கள் அமைக்க, 80 சதவீதம் மானியம் வழங்கப்படும். சூரிய ஒளியால் இயங்கும் மின் மோட்டார்கள் தேவைப்படும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment