கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறு தானியங்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில், கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, வரகு, சாமை போன்றவற்றில் இருந்து பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனைப் பொருள்கள், உடனடி தயார் நிலை உணவுகள் தயாரிப்பு போன்ற தலைப்புகளில் விளக்கம், பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நேரில் வந்து பெயரைப் பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள், பயிற்சிக் கட்டணத் தொகையை வரைவோலை எடுத்து, "பேராசிரியர், தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை' என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் பெறத் தக்க வகையில் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர், தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், கோவை - 3 என்ற முகவரியில் நேரிலோ, 0422-661 1340, 661 1268 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். பெயர்களை வரும் ஜூலை 12-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
Source : Dinamani
No comments:
Post a Comment