குலசேகரம் : திருவட்டாரை அடுத்த செவரகோடு பகுதியை சேர்ந்தவர் ஆல்பன். குமரி மேற்கு மாவட்ட தமாகா பொதுச்செயலாளர். இவரது வீட்டோடு சேர்ந்த இடத்தில் வாழை விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் சுமார் 5 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்த வாழைகள் தான் குலை தள்ளிய நிலையில் உள்ளன. இதில் மட்டி வாழை கூட்டமாக நிற்கும் இடத்தில் வாழைக்கன்று ஒன்று சுமார் ஒன்றரை அடி உயரம் வளர்ந்த நிலையில், திடீரென பூ விரிந்து இரண்டு சீப் காய்களுடன் குலை தள்ளிய நிலையில் உள்ளது. சாதாரணமாக மட்டி வாழைகள் அதிக உயரத்தில் வளரக் கூடியவை. இந்த நிலையில் ஒன்றரைஅடி உயரத்தில் வாழை குலை தள்ளிய அதிசயத்தை அப்பகுதி மக்கள் பார்த்து வியந்தனர்.
Source : Dinakaran
No comments:
Post a Comment