பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் உழவர்- தொழில் முனைவோருக்கு வேளாண்மை தொழில் நுட்பம் பயிற்றுவிக்கும் பயிற்சி ஜூலை 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் சுரேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை வேளாண்மையில் நவீன தொழில் நுட்பம் குறித்த பயிலரங்கம் நடைபெறும். திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி கருத்துரை வழங்க உள்ளார். இதில் மதுரை மாவட்ட உழவர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9486486668 என்ற செல்லிடப் பேசியில் தொடர்பு கொள்ளுமாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Source : Dinamani
No comments:
Post a Comment