வாழையில் சாம்பல் மற்றும் போரான் சத்து குறையை நிவர்த்தி செய்ய எளிய வழிமுறைகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்ரில் இயங்கும் பருத்தி ஆராய்ச்சி நிலையம் பயனுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளது.
சாம்பல் சத்து பற்றாக்குறை அறிகுறிகள்: முதிர்ந்த இலைகள், ஓரங்களில் இருந்து ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் இலையின் ஓரங்கள் காய்ந்தும் உள்நோக்கி சுருண்டும் காணப்படும். இலையின் அளவும் சிறுத்து விடும். முற்றிய நிலையில் இலைகள் வெளி வராது மற்றும் பூ வருவதும் தாமதமாகும். வாழைப்பழத்தின் தரமும் குன்றிவிடும்.
நிவர்த்திக்கு என்ன வழி: 20 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 10 நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் மறையும் வரை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
போரான் சத்து பற்றாக்குறை அறிகுறிகள்: இளம் இலைகளில் சில நரம்புகள் பக்கம் பக்கமாக நெருக்கமாகவும், நரம்புக்கு இணையாக மஞ்சள் நிறப்புள்ளிகள் வளைந்து வளைந்து ஏணி போன்ற தோற்றத்தில் உருவாகும். இலைக்குருத்துக்கள் விரியாமல், இளம் இலைகள் கிழிந்து, பழுப்பு நிறமாக மாறும் பழங்களில் வெடிப்பு தோன்றும்.
நிவர்த்திக்கு வழி உண்டு: போரான் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் தென்பட்டதும் 100 லிட்டர் நீரில் 200 கிராம் போராக்ஸ் கலந்த கரை சலை, இலைகளின் மேல் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- பேராசிரியர் ம.குணசேகரன்,
பருத்தி ஆராய்ச்சி நிலையம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
.
Source : Dinamalar
No comments:
Post a Comment