கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில், ஈரோடு அசோகபுரம், லட்சுமி தியேட்டர் அருகில், ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில், காளான் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடக்க உள்ளது. ஆக.,1 முதல், ஆறு நாட்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவிக்குழுவினர் பங்கேற்கலாம். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. மதிய உணவு உட்பட அனைத்தும் இலவசம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரம் அறிய, 0424-2290338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Source : Dinamalar
Source : Dinamalar
No comments:
Post a Comment