சில்பாலின் பைகளில் மண்புழு உரத்தை எளிதாக தயாரித்து சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: ‘‘மண்புழு என்பது இயற்கையின் மிகப்பெரிய சக்திகளில் ஒன்றாக உள்ளது. மேல் மண் படலத்தை வைத்திருக்கவும், அதற்கு புத்துயிரூட்டவும் மண்புழுவையே இயற்கையானது பயன்படுத்தி கொள்கிறது. மண்புழுவில் எபிஜியிக் புழுக்கள், எண்டோஜியிக் புழுக்கள், அனிசிக் புழுக்கள் என 3 வகை உள்ளன.
மண்புழு உரம் அதிக அளவில் விற்பனைக்கு இருந்தாலும் அதன் அதிகபடியான விலையால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால் சில்பாலின் பைகள் மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் முறை அனைத்து விவசாயிகளையும் எளிதாக்கி விடுகிறது.
இதன்மூலம் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் இருந்து கிடைக்கும் இயற்கைக் கழிவுகளையும், மண்புழுக்களையும் கொண்டு தங்கள் இடத்திலேயே மண்புழு உரத்தை தயாரிக்கலாம். சில்பாலின் தொட்டி அமைக்க 250 ஜீ.எஸ்.எம் அளவிலான கனத்தை கொண்ட சில்பாலின் பை தேவை. இது 4 கிலோ எடையாக இருக்க வேண்டும்.
இதற்கு ஒரு அங்குலம் கனம் கொண்ட குழாய் அல்லது மூங்கில் சவுக்கு குச்சிகள் தேவைப்படும். சில்பாலின் தொட்டியின் அடிப்பகுதியில் தேங்காய் நார் அரை அடி உயரத்திற்கு இருக்குமாறு நிரப்ப வேண்டும்.
இதில் தகுந்த அளவு ஈரப்பதம் உள்ளவாறு நீரினை தெளிக்க வேண்டும். இப்பையை மேல் புறத்தில் நிழல் வலை கொண்டு மூட வேண்டும்.அறுவடை செய்யப்பட்ட மண்புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவீத ஈரப்பதத்தில் சூரிய ஓளி படாதவாறு வைக்க வேண்டும். மண்புழு உரத்தை உற்பத்தி செய்து அவற்றைப் பயன்படுத்துவதுதான் சிறு மற்றும் குறு விவசாயிகளின் உற்பத்தி திறன் குறைவிற்கு ஒரு மாற்று வழியாகும். இதன்மூலம் 25 சதவீதம் ரசாயன உரச் செலவு குறைந்து அதிக உற்பத்தியையும் கிடைக்கும்’’ இவ்வாறு தெரிவித்தனர்.
source : Dinakaran

No comments:
Post a Comment