நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது என தலைவர் என்.அகிலா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 18ஆம் தேதி காலை 9 மணிக்கு செடி முருங்கை, செடி அவரை மற்றும் வெண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப் பயிற்சி முகாமில் செடி அவரை, செடி முருங்கை மற்றும் வெண்டையில் உள்ள ரகங்கள், பருவம், விதை அளவு, விதை நேர்த்தி, பயிர் இடைவெளி, சொட்டு நீர்ப் பாசன முறையில் நீர்வழி உரமிடல், களை நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் நிர்வாக முறைகள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் விரிவாகக் கற்றுத் தரப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 16ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Source : Dinamani
No comments:
Post a Comment