இயற்கை வேளாண்மை சாகுபடி முறையில் விவசாயிகள் ஈடுபட்டால் இயற்கை சுற்றுச்சூழல் பாதிக்காமல், பூச்சி, நோய்கள் கட்டுப்படுத்தி பயிர்களை பாதுகாத்து சாகுபடி செய்ய முடியும் என வேளாண்மைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மக்கள் தொகையின் உணவு தேவையை ஈடு செய்வதற்கு குறைந்த நிலப்பரப்பில் உயர் விளைச்சல் ரகம் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் இருப்பதால், தாங்கள் பயிர்கள் பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கு வீரியமிக்க ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை அதிகமாக பயன்படுத்த வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இப்படி ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு, பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டால் உணவு தானியத்தில் நஞ்சு தங்கும் அபாயம், இயற்கையில் நமக்கும் நன்மை செய்யும் பூச்சிகள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனிதர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ரசாயன மருந்து பயன்படுத்தி விவசாயம் செய்வதை விவசாயிகள் தவிர்த்து விட்டு, எந்த பாதிப்பும் இல்லாத இயற்கை விவசாயத்தை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான செய்தி தொகுப்பை வேளாண்மை உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார், வேளாண்மை அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், ஆரோக்கியராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
உயிரியல் காரணங்கள்
தமிழகத்தில் உள்ள 13 உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகம் செய்யப்படும் உயிரியல் காரணங்கள் 1, டிரைக்கோடெர்மா விரிடி, இதனால் பயிர்கள் வேர்அழுகல், தண்டு அழுகல், வாடல் நோய்கள் பட்டுப்படுத்த முடியும். 2 சூடோமோனாஸ் புளோரசன்ஸ், இதனால் பயிர்களுக்கு நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் குறையும். 3 என்பிவி வைரஸ் கரைசல், இதனால் பருத்து, மணிலா மற்றும் பயிறுவகைகளில் ஏற்படும் 22 க்கும் மேற்பட்ட பூ, காய்ப்புழு நோய்களை கட்டுப்படுத்தப்படும். 4 டிரைக்கோகிராமா கைலோனிஸ், இதனால் கரும்பு பயிரை தாக்கும் பல்வேறு நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.
Source: Dinakaran

No comments:
Post a Comment