மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று காஞ்சிபுரம் விதை பரிசோதனை நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விதைப் பரிசோதனை அலுவலர் ஹேமேந்திர குமார் பாண்டே வெளியிட்ட அறிக்கை:
ஆடிப் பட்டத்தில் சாகுபடியாளர்களுக்கு அதிக இடுபொருள் தேவைப்படுவது, மணிலா விதைக்கேயாகும். எனவே, தரமான விதையாக இருந்தால் தேவையானவற்றை மட்டும் பயன்படுத்தி விதைச் செலவை
குறைக்கலாம். மணிலாவைப் பொருத்தவரை, குறைந்தபட்ச முளைப்புத் திறன் 70 சதவீதம் இருந்தால் தான் ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
இவ்வாறு பராமரிக்கும்பட்சத்தில், ஒரு செடிக்கு 40 காய்கள் கிடைக்கும். இதனால் விவசாயிகள் தற்போது பெறுகின்ற மகசூலைவிட 50 சதவீதம் கூடுதலாகப் பெற முடியும்.
எனவே, விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள மணிலா விதையில் அரை கிலோ அளவுக்கு விதை மாதிரி எடுத்துக்கொண்டு விதைப் பரிசோதனை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம்,
காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு ரூ.30 பரிசோதனை கட்டணத்துடன் நேரில் அணுகலாம் அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Source : Dinamani
No comments:
Post a Comment