திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், ஜூலை 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக் கலை, வருவாய், வேளாண்மை பொறியியல், மீன் வளம், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை, வணிகம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு, விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண உள்ளனர்.
மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.
Source : Dinamani
No comments:
Post a Comment