Wednesday, July 13, 2016

மூலிகை மந்திரம் அவரை



நன்றி குங்குமம் டாக்டர்

சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்


சுவை மிக்க காய்கறிகளில் ஒன்று அவரை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், மருந்துமாகிப் பயன் தரும்  அளவு பல சத்துகளைக் கொண்ட புதையல் பெட்டகம் அவரை என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதன்  மருத்துவ சக்தியை உணர்ந்துதான் நோயுற்ற காலங்களில் பத்திய உணவாகவும் நம் முன்னோர் பயன்படுத்தி வந்தனர்.  கொடி வகையைச் சேர்ந்த தாவரமான அவரை, தென்னிந்தியாவைப் பொறுத்தவரை உணவுக்கென வீட்டிலும்  வளர்க்கப்படும் பெருமைக்குரியது.

பெரும்பாலும் ஆடி மாதத்தில் விதைக்கப்படும் அவரை, சுமார் 6 மாத காலத்தில் (அதாவது, மார்கழி, தை மாத  காலங்களில்) கொத்துக் கொத்தான காய்களுடன் வெள்ளை மற்றும் நீலநிறப் பூக்களும் கொண்டு அழகான தோற்றத்துடன் வளர்ந்திருக்கும். கோழி அவரை, சப்பரத்தவரை, கொத்தவரை, சீனி அவரை, காட்டவரை, பூனைக்கால்  அவரை, சீமை அவரை, முருக்கவரை, வாளவரை, பேயவரை, ஆட்டுக்கொம்பு அவரை, வெள்ளவரை என அவரையில்  பல வகைகள் உள்ளன.

நாம் சமையலில் அதிகமாகப் பயன்படுத்துவது கொடி அவரை என்பது குறிப்பிடத்தக்கது. Indian butterbean  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அவரையின் தாவரப்பெயர் Lablab purpureus என்பது ஆகும்.  சமஸ்கிருதத்தில் அவரைக்கு நிஷ்பவா என்று பெயர் உண்டு. இது தவிர சிம்பை, சிக்கிடி, நகுனி என்பவற்றைக்கூட  அவரையின் பெயர்களாகக் குறிப்பர்.

அவரையில் அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள் உடலுக்கு ஊட்டச்சத்தாகவும் மருந்தாகவும் பயன்தரும் பொருட்கள்  அவரையில் நிறைந்துள்ளன. ஒரு கப் அளவுள்ள அவரையில் புரதச்சத்து 12.9 கிராம், நீர்ச்சத்து 122 கிராம், சாம்பல் சத்து  1.4 கிராம், நார்ச்சத்து 9.2 கிராம், கொழுப்புச்சத்துகள் 1.2 கிராம்,  எரிசக்தியான கார்போஹைட்ரேட் 569 கலோரி அடங்கியுள்ளது. இதனுடன் நார்ச்சத்து, சர்க்கரைச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி,  ரிபோஃப்ளேவின், நியாசின், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செம்புச்சத்து,  செலினியம், சோடியம், கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3, ஒமேகா 6  ஆகியனவும் மிகுதியாக அடங்கியுள்ளன.

Source :Dinakaran

No comments:

Post a Comment