கூடலுார்: கூடலுார், பால்மேடு தனியார் தேயிலை தோட்டத்தில் முளைத்த, பெரியளவிலான காட்டு வகை காளான், பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பால்மேட்டை சேர்ந்தவர் அப்துல்லா; இவருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில், நேற்று, பெரியளவிலான காட்டு வகை காளான் வளர்ந்திருந்ததை, இப்பகுதி மக்கள் கண்டு வியந்தனர். அப்துல்லா கூறுகையில், “தேயிலை தோட்டங்களில், பல வகை காளான்கள் முளைப்பது வழக்கம். ஆனால், இதுவரை, இதுபோன்ற பெரியளவிலான காளானை பார்த்ததில்லை,'' என்றார்.
தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழை காலங்களில், மரத்தின் வேர், தேயிலை தோட்டங்களில், காளான்கள் வளர்வது வழக்கம். இதுவரை பார்த்ததில், இக்காளான் தான், மிகப்பெரியதாக இருக்க முடியும்,'' என்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment