விவசாயிகளுக்கு மானிய விலையில் தெளிப்புநீர்ப் பாசனக் கருவிகள் வழங்கப்படும் என்று கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குநர் சித்ராபானு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோத்தகிரி வட்டாரத்தில் மத்திய அரசின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் வழங்கப்படவுள்ளன.
இதில், காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் கருவிகள் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் தரப்படும். எனவே, இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Source : Dinamani
No comments:
Post a Comment