அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அவர் தெரிவித்தாவது: அரியலூர் மாவட்டத்தில்
உரங்கள் தற்பொழுது வேளாண்மை விரிவாக்க மையம், கூட்டுறவுத் துறை மற்றும்
தனியார் துறை என மொத்தம் 191 மெ. டன் நெல் விதைகள் இருப்பில் உள்ளன.
குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் 1,000 ஏக்கரில் இயந்திர நெல்
நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 267 ஏக்கர் சாதனை அடையப்பட்டுள்ளது.
விசை உழுவை இயந்திரம் (பவர் டில்லர்) 50% மானிய விலையில் அதிக பட்சமாக
இயந்திரம் ஒன்றுக்கு ரூ.75,000 வீதம் 50 பேருக்கு வழங்கிட ரூ.37.5 லட்சம்
இலக்கீடு பெறப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - பயறு
வகைகளை விநியோகம் செய்திட கிலோ ஒன்றுக்கு ரூ.15 வீதம் மானிய விலையில்
வழங்கிட 5 மெ.டன்களுக்கு ரூ.75 லட்சம் பெறப்பட்டுள்ளது. வரிசை விதைப்பு
முறையில் பயிரிடும் பயனாளிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு
ரூ.1,000 வீதம் 500 ஹெக்டேரில் வழங்கிட ரூ.5 லட்சம் இலக்கீடு
பெறப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - எண்ணெய் வித்து
உற்பத்தி பெருக்கத் திட்டத்தின் கீழ் 500 ஹெக்டேர் பரப்பில் விதை
விதைப்புக் கருவி கொண்டு நிலக்கடலை விதைப்பு செய்வதற்கு ஹெக்டேருக்கு
ரூ.1,000 வீதம் மானியமாக வழங்கிட ரூ.5 லட்சம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது.
மேலும், நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஜிப்சம் இடுவதற்காக
ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.750 வீதம் 300 ஹெக்டேருக்கு 50 சதவீத மானிய விலையில்
வழங்கிட ரூ.2.25 லட்சம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது.
எனவே,வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும்
திட்டங்களில் விவசாயிகள் பயன் பெற தங்களது பகுதி வட்டார வேளாண்மை உதவி
இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.
Source : Dinamani
No comments:
Post a Comment