குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர்
கல்லூரி சார்பில், உலக சாதனைக்காக 12 மணி நேரத்தில் 62,000 காய்கறி
நாற்றுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர்
கல்லூரியில் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக
காய்கறிகளின் மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும் நோக்கில் 62,000 காய்கறி நாற்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.
உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற
நோக்கில் 62,000 காய்கறி நாற்றுகளை காலை 7 முதல் இரவு 7 மணி என 12 மணி
நேரத்தில் இந்த காய்கறி நாற்றுகள் வழங்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட
நேரத்துக்கு முன்னதாகவே நாற்றுகள் கொடுத்து முடிக்கப்பட்டன. இதனால் சாதனை
புத்தகத்தில் இடம் பெறுவது உறுதிசெய்யப்பட்டது. இந்த நாற்றுகளை குன்னூர்
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்
சென்றனர். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஷீலா உள்ளிட்ட பல்வேறு
சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
source : Dinamani
No comments:
Post a Comment