Friday, July 8, 2016

மஞ்சள் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பொருளீட்டு கடன்

கோவை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரவணன்  கூறியதாவது:விவசாயிகளின் விளைபொருள்களான மஞ்சளை கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாதுகாப்புடன் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். மஞ்சளுக்கு உயர்ந்தபட்ச விலை கிடைக்க விவசாயிகள் விரும்பும் மறைமுக ஏலம் அல்லது பகிரங்க ஏலம் நடத்தப்படுகிறது. விவசாயிகளிடம் கமிஷன், தரகு போன்ற விற்பனை செலவினங்கள் ஏதும் பிடித்தம் செய்யாமல் இலவச சேவையாக செய்யப்படுகிறது.

விலை வீழ்ச்சி காலங்களில் ஒரு விவசாயிக்கு இருப்பு வைக்கப்படும் பொருளின் மதிப்பிற்கேற்ப ரூ.2 லட்சம் வரை குறைந்த வட்டிக்கு பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டில் ஒரு மெட்ரிக் டன் அளவுக்கு விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்கும் விவசாயிகள் விபத்தின் காரணமாக உயிரிழந்தாலோ, நிரந்தர ஊனமுற்றாலோ ரூ.50 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை மான்யமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கோவை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறினார்.

Source : dinakaran

No comments:

Post a Comment