ஓசூர்: ஓசூர், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விவசாயிகளுக்கு விஞ்ஞான முறையில் தானியம் சேமிப்பது குறித்த பயிற்சி நடந்தது. வேளாண்மை இயக்குனர் காளியப்பன் தலைமை வகித்தார். நெல், கம்பு, சோளம், ராகி பயிர்களை, அறுவடை முதல் விற்பனை வரையிலும் தானிய இழப்பு இன்றி நவீன முறைப்படி பாதுகாப்பது, அவற்றை மதிப்புக் கூட்டுவதால் கிடைக்கும் கூடுதல் லாபம், 5 சதவீத குறைந்த வட்டிக்கு பொருட்கடன் பெறுதல், குளிர்பதன கிடங்கு வசதி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விளை பொருட்களை பதப்படுத்துதல், சேமித்தல், மானிய வசதிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சிக்கான எற்பாடுகளை, தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment