Tuesday, October 6, 2015

வேளாண் துறையில் இயந்திரமயமாக்கும் திட்டம் விரிவாக்கம்! மானிய விலையில் 91 இயந்திரங்கள் வழங்க முடிவு


திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் துறையில் இயந்திரமயமாக்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்ய, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நடப்பாண்டு, மானிய விலையில், 91 இயந்திரங்கள் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க, வேளாண் துறையில் இயந்திரமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, நடப்பாண்டு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வேளாண் இயந்திரங்கள், மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இயந்திரங்களின் வகை மற்றும் விலைக்கு ஏற்ப, 15 ஆயிரம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை, அரசு மானியம் வழங்குகிறது.அதில், 45 நெல் நடவு இயந்திரங்கள், 37 விதை விதைப்பு இயந்திரங்கள், ஒன்பது களை எடுக்கும் இயந்திரங்கள் என, 91 வேளாண் இயந்திரங்கள் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆதித்தன் கூறியதாவது: வேளாண் துறையில், இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், எங்கள் துறை மூலம், விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரங்கள், மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, ஏழு நெல் நடவு இயந்திரங்கள்; நான்கு விதை விதைப்பு இயந்திரங்கள்; 45 களை எடுக்கும் இயந்திரங்கள் என, 56 இயந்திரங்கள் வழங்கப்பட்டன.நடப்பாண்டு, நெல் நடவு இயந்திரங்களும், விதை விதைப்பு இயந்திரங்களும், கூடுதலாக வழங்கப்பட உள்ளன. விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில், இந்த இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படும். எனவே, ஆர்வம் உள்ள விவசாயிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில், தங்களது விண்ணப்பங்களை உடனடியாக வழங்கி பயன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
வேளாண் இயந்திரங்களும் மானியமும்
இயந்திரம்     விலை    மானியம் (விவசாயிகளின் வகைக்கு ஏற்ப)
நெல்நடவு (4 வரிசை) ரூ.2.5 லட்சம்                  ரூ.75 ஆயிரம் ரூ.94 ஆயிரம் ரூ.94 ஆயிரம்
நெல் நடவு (4 வரிசைக்கு மேல்,                                                             
8 வரிசைகள் வரை)          ரூ.17 லட்சம்                   ரூ.2 லட்சம்    ரூ.2 லட்சம்    ரூ. 2 லட்சம்
நெல் நடவு (8 வரிசைகளுக்கு மேல்)               ரூ.17 லட்சம்                   ரூ.2 லட்சம்    ரூ.2 லட்சம்    ரூ.2 லட்சம்
விதை விதைப்பு கருவி           ரூ.65 ஆயிரம்                   ரூ.35 ஆயிரம்                   ரூ.44 ஆயிரம்                   ரூ.44 ஆயிரம்
களை எடுக்கும் கருவி           ரூ.1 லட்சம்    ரூ.15 ஆயிரம்                   ரூ.19 ஆயிரம் ரூ.19 ஆயிரம்
விண்ணப்பிக்கும் இடங்கள்:
உதவி செயற் பொறியாளர் அலுவலகம், திருவள்ளூர்          -                 97898 64292.
உதவி செயற் பொறியாளர் அலுவலகம், திருத்தணி                                   -                 98412 54495.
உதவி செயற் பொறியாளர் அலுவலகம், பொன்னேரி  -                 94427 24363.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1358861

No comments:

Post a Comment