மதுரை,: ஈரோடு இயற்கை விவசாயி கலைவாணி, கர்நாடகா நெடுஞ்சாலையில் ஆலமரங்கள் நட்டு பராமரித்த 105 வயது மூதாட்டி திம்மக்கா உட்பட மூவருக்கு, சாதனையாளர்கள் விருது மதுரையில் வழங்கப்பட்டது.தானம் அறக்கட்டளையின் ௧௯வது ஆண்டு விழா நடந்தது. நிர்வாக இயக்குனர் வாசிமலை தலைமை வகித்தார். இயற்கை விவசாயி ஈரோடு வெள்ளித்திருப்பூர் கலைவாணி, கர்நாடகா நெடுஞ்சாலைகளில் ஆலமரங்கள் நட்டு சாதனை புரிந்த ௧௦௫ வயது சாலுமாராட திம்மக்கா, ஒடிசா சமூக சேவகர் கபியசில்பி சர்பேஸ்வர் தாஸ் ஆகியோருக்கு 'சமூக மேம்பாட்டு சாதனையாளர்கள்' விருது வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா தகவல் கமிஷனர் தாங்க்சை பிரான்சிஸ்
தெக்கெக்கரா, ஊராட்சி சட்டங்கள் ஆய்வாளர் வள்ளிநாயகம் பங்கேற்றனர்.கலைவாணி கூறியதாவது:சேலத்தில் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் மகளாக பிறந்தேன். டாக்டர் கனவுடன் படித்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, விவசாய குடும்பத்தை சேர்ந்த ஆறுமுகத்திற்கும், எனக்கும் திருமணம் நடந்தது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். எனக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. வீட்டில் உள்ளவர்களுக்கு சமைக்க மட்டும் தெரியும். எனக்கு ௩ குழந்தைகள். திடீரென குடும்ப சொத்தை பிரிக்க வேண்டிய நிலை. என் கணவர் இறந்தார். எங்களுக்குரிய பங்கு நிலத்தை தர மறுத்தனர். பலகட்ட போராட்டங்களுக்கு பின், எனக்குரிய ௫ ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்தேன். உறவினர்கள் உதவி செய்ய முன்வரவில்லை.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தபால் வழியில் ஒன்றரை ஆண்டுகள் விவசாயம் படித்தேன்.
தொண்டு நிறுவனத்தினர் விவசாயத்தில் பயிற்சி அளித்தனர். மைராடா தொண்டு நிறுவன நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியால் வெள்ளி திருப்பூரில் முதன்முதலாக, ௫ சென்ட் நிலத்தில் செம்மை நெல் சாகுபடி செய்தேன்.
சொட்டு நீர் பாசனம் அமைத்து, வரப்போரங்களில் உளுந்து நடவு செய்தேன். இதை பார்த்தவர்கள்,' இந்தம்மாவிற்கு புருசன் செத்த பிறகு புத்தி மாறிப்போச்சு,' என்றனர். வயலில் பசுமை தாண்டவமாடியது. நெல் மணிகளை பார்த்து ஊரே ஆச்சரியமடைந்தது.ரசாயன உரங்கள் மூலம் சாகுபடி செய்தால், ஏக்கருக்கு ௭ குவிண்டால் பருத்திதான் கிடைக்கும். ஆனால் இயற்கை உரங்களை பயன்படுத்தி பருத்தி சாகுபடி செய்து, ௧௫ குவிண்டால் மகசூல் பெற்றேன். இதற்காக சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி
அண்ணாதுரையிடம் பரிசு பெற்றேன். இதனால் தற்போது, எங்கள் ஊரில் ௮௦௦ பேர், 2000 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கின்றனர். ஈரோடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவியாக உள்ளேன். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இயற்கை விவசாயம் பற்றி பயிற்சியளிக்கிறேன் என்றார்.
சாலுமாராட திம்மக்கா: நான் கர்நாடகா ராமநகர் மாவட்டம் ஹீலிக்கால் கிராமத்தை சேர்ந்தவள். ஹீலிக்கால் முதல் குதுார் வரை 4 கி.மீ., துார நெடுஞ்சாலையில் 384 ஆலமரங்களை நட்டு பராமரித்தோம். எனது கணவர் உறுதுணையாக இருந்தார். எங்களின் சொந்த பணம் மூலம் இப்பணியை செய்தோம். கணவர் இறந்துவிட்டார். தற்போது மரங்கள் பராமரிப்பை கர்நாடக அரசு செய்கிறது.
மரங்கள் நட்டதற்கு அங்கீகாரமாக 'தேசிய குடிமகன் விருது' உட்பட பல்வேறு விருதுகள் கிடைத்தன. எனக்கு வயதாகிவிட்டதால், வளர்ப்பு மகன் உமேஷ் மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் இதுவரை ஒரு லட்சம் பல்வேறு வகை மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்றார்.
கபியசில்பி சர்பேஸ்வர் தாஸ் ஒரு மாற்றுத்திறனாளி. ஒடிசாவில், சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர்.
௧௯௯௯ல் ஒடிசாவை தாக்கிய சூப்பர் புயலுக்கு பின், தனது பேரிடர் மேலாண்மை பணியை துவக்கியவர். புயலின் பாதிப்பிலிருந்து பலரை காப்பாற்றியுள்ளார். ஒடிசா முதல்வரிடமிருந்து, புயல் பாதுகாப்பு முகாம் பராமரிப்பிற்கான சிறந்த செயலர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

No comments:
Post a Comment