Friday, October 2, 2015

கரும்பு விவசாயிகளிடம் 14ம் தேதி கருத்து கேட்பு




காஞ்சிபுரம்: மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையுடன், உத்திரமேரூர் கரும்பு விவசாயிகள் இணைவது குறித்து, வரும் 14ம் தேதி, கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சவுரிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையுடன் உத்திரமேரூர் பகுதி கரும்பு விவசாயிகள் இணைவது குறித்து, கருத்து கேட்பு கூட்டம், வரும் 14ம் தேதி காலை 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் அன்னை அஞ்சுகம் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
சர்க்கரை துறை இயக்குனர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு, களியாம்பூண்டி, குண்ணவாக்கம், திருப்புலிவனம், உத்திரமேரூர் மற்றும் அரும்புலியூர் ஆகிய ஐந்து குறுவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment