உழவர் பாதுகாப்பு திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 1.32 லட்சம் பேருக்கு, 128.72 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.விழாவில், 2,271 பயனாளிகளுக்கு, ஒரு கோடியே, 27 லட்சத்து, 80 ஆயிரத்து, 550 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது: மாவட்டத்தில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், உறுப்பினராக பதிவு செய்துள்ளனர். கடந்த, ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து, 318 பேருக்கு, 128.72 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில், சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா, எம்.பி., சுந்தரம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சரஸ்வதி, சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment