சிவகங்கை:""பருவ மழைக்கு நோய்
பரவாமல் தடுக்க, தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்,'' என கலெக்டர் மலர்விழி
தெரிவித்தார். அவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவ மழைக்கு பொதுமக்களுக்கு
வயிற்று போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு.இவை
வராமல் தடுக்க குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டிய பின் குடிக்க வேண்டும். தண்ணீர் சேமித்து
வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்கவும். தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒரு முறை தேங்காய்
நார், பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்து, காய வைத்த பின் மீண்டும் தண்ணீர்
நிரப்ப வேண்டும்.
தற்போது மழை பெய்து வருவதால், வீடுகளை
சுற்றியுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள், டயர், ஆட்டு உரல்,
தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் கப் போன்றவற்றை அப்புறப்படுத்துவதின் மூலம், கொசு உற்பத்தியாவது
தடுக்கப்படும். இதன் மூலம் டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
காய்ச்சல் கண்டவர்கள் அருகே உள்ள அரசு
மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெறலாம், என்றார்.
No comments:
Post a Comment