Friday, November 20, 2015

இயந்திர நெல் நடவு: அதிகரிக்கும் மகசூல்


வடமதுரை,:வடமதுரை வட்டாரம் முத்தனாங்கோட்டையில் நெல் சாகுபடி குறித்த பண்ணைப் பள்ளி வகுப்பு நடந்தது. இணை இயக்குனர் சம்பத்குமார் துவக்கி வைத்தார். தொழில்நுட்ப மேலாண்மை திட்ட வேளாண்மை அலுவலர் பாண்டியராஜன், உதவி இயக்குனர் ராணி பங்கேற்றனர். 
மேட்டுப்பாத்தி முறையில் அமைக்கப்பட்ட 18 முதல் 20 நாள் நெல் நாற்றுக்களை நடவு இயந்திரம் மூலம் சீரான இடைவெளியில் ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நடப்பட்டது. <உதவி இயக்குனர் கூறுகையில், ""இயந்திர நடவு முறையில் பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. போதிய இடைவெளி இருப்பதால், சூரிய வெளிச்சம், காற் றோட்டம் கிடைப்பதால் அதிக சிம்புகளும், பக்க சிம்புகளும் வெடித்து மகசூல் அதிகரிக்கும். நடவு பணி செலவினம் குறைகிறது. எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இயந்திர நடவு செய்ய விரும்புவோர் வடமதுரை வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகலாம்'' என்றார்.

No comments:

Post a Comment