இந்திய வாசனைப் பொருள்கள் வாரியத்தின் தலைவரான ஏ.ஜெயதிலக் இதனைத் தெரிவித்தார். கொச்சியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் தெரிவித்ததாவது:
மிளகு வேளாண், வர்த்தகம் தொடர்பான மாநாட்டை சர்வதேச மிளகு அமைப்பு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இவ்வாண்டு சர்வதேச மிளகு அமைப்பின் வருடாந்தர மாநாடு, மைசூரில் நடைபெறவுள்ளது. நவ. 22-ஆம் தேதி தொடங்கவுள்ள 4 நாள் மாநாட்டில், மிளகு ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில், மிளகு உற்பத்தியை அதிகரித்தல், தரம் மேம்பாடு, புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல், சர்வதேச வர்த்தக சட்ட நுணுக்கங்கள் ஆகியவை குறித்து தனித்தனி அமர்வுகள் நடைபெறும்.
சர்வதேச மிளகு அமைப்பில் இந்தியாவைத் தவிர, பிரேசில், இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, வியத்நாம் ஆகிய நாடுகள் முழு அளவிலான உறுப்பு நாடுகளாக உள்ளன. பப்புவா நியூகினீ துணை உறுப்பு நாடாக உள்ளது. சீனா, கம்போடியா, மடகாஸ்கர் ஆகிய நாடுகள் விரைவில் இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளாக இணையவுள்ளன என்றார் அவர்.
1972-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சர்வதேச மிளகு அமைப்பின் தலைமையகம், இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் உள்ளது. அந்த அமைப்பின் தற்போதைய தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர், இந்திய வாசனைப் பொருள்கள் வாரியத்தின் தலைவரான ஏ.ஜெயதிலக்.
http://www.dinamani.com/business/2015/11/20/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B0/article3137516.ece
No comments:
Post a Comment