பெரம்பலூர் மாவட்டத்தில் நெல்,
சின்ன வெங்காயம், நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள்,
நிகழாண்டில் காய்கறி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் பருத்தி, மக்காசோளம், சின்ன
வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்வதில், தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, நிகழாண்டு நெல் 516 ஹெக்டேரிலும், கரும்பு 4,859
ஹெக்டேரிலும், பயறுவகை பயிர்கள் 837 ஹெக்டேரிலும், தானியப் பயிர்கள் 36,732
ஹெக்டேரிலும், எண்ணெய் வித்து பயிர்கள் 825 ஹெக்டேரிலும் சாகுபடி
செய்யப்பட்டுள்ளது. போதிய விலையின்மை, பருவ மழையின்மை உள்ளிட்ட பல்வேறு
காரணங்களால் மாவட்ட விவசாயிகள் தற்போது காய்கறிகளை சாகுபடி செய்வதில்
ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நிகழாண்டில் கத்தரி 82 ஹெக்டேர் பரப்பளவிலும், தக்காளி
104 ஹெக்டேரிலும், வெண்டை 23 ஹெக்டேரிலும், பாகற்காய் 19 ஹெக்டேரிலும்,
புடலங்காய் 28 ஹெக்டேரிலும், முருங்கை 9 ஹேக்டேரிலும், பீர்க்கங்காய் 7
ஹெக்டேரிலும், முள்ளங்கி 6 ஹெக்டேரிலும், மிளகாய் 191 ஹெக்டேர்
பரப்பளவிலும் என மொத்தம் 469 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிகள் சாகுபடி
செய்யப்பட்டுள்ளன.
குறுகிய காலத்தில் எளிதில் அறுவடை, செலவு குறைவு
உள்ளிட்ட காரணங்களால் பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஆண்டுகளில் காய்கறிகளை
சாகுபடி அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர் கீழக்கணவாய்
கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்.
No comments:
Post a Comment