கம்பம்,
கம்பம் பகுதியில் எந்திர நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என்று தேனி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நெல் நடவு பணிகள் தேனி மாவட்டம் கம்பம் வட்டார பகுதியில் முதல்போக நெல் அறுவடைப்பணிகள் முடிந்து தற்போது 2–ம் போக விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருங்கிணைந்த உணவு தானிய உற்பத்தி பெருக்குத் திட்டத்தின் கீழ் கம்பம், காமயகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், கூடலூர் மற்றும் சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் எந்திர நடவு மேற்கொள்வதற்கு நாற்றங்கால் அமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
எந்திர நடவுக்காக பாய் நாற்றாங்கால் மற்றும் குழித்தட்டு நாற்றாங்கால் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை தேனி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வெங்கிட சுப்ரமணியன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
ரூ.3 ஆயிரம் மானியம் இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கூறியதாவது:–
சாதாரண நடவு முறையில் 8 செண்ட் அளவுக்கு நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஆனால் எந்திர நடவு மேற்கொள்ளும் போது ஏக்கருக்கு ஒரு செண்ட் நாற்றங்கால் போதுமானது. எந்திர நடவு மேற்கொள்ளும் பயிர் இடைவெளி 22.5 செ.மீ என்ற அளவில் சரியாக கடைபிடிக்கப்படும். இதனால் காற்றோட்டம் அதிகரிக்கும். மேலும் எந்திரம் மூலம் களை எடுக்க ஏதுவாக இருக்கம்.
சரியான பயிர் இடைவெளி, எந்திரம் பயன்படுத்துதல் மூலம் தூர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எந்திர நடவு மேற்கொள்வதால் ஏக்கருக்கு 500 கிலோ வரை அதிகமாக மகசூல் கிடைக்கும். விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ள இத்தருணத்தில் நெல் விவசாயிகள் எந்திர நடவு முறையினை மேற்கொண்டு பயனடைய வேண்டும்.
மேலும் எந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயனடைய விவசாயிகள் வயல் சிட்டா நகல், ஆதார் எண், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை அந்தந்தப்பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைப்பு செய்து பயன்பெறலாம். மேற்கண்டவாறு அவர் கூறினார்.
அவருடன் கம்பம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர்அசோகன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment