சம்பா நெல் சாகுபடிக்குத் தேவைப்படும் நுண்ணூட்டத்துடன்
கூடிய காம்ப்ளக்ஸ் மற்றும் அமோனியம் சல்பேட் உரம் 1340 டன் சனிக்கிழமை
திருச்சி வந்தது.
கொச்சியில் இயங்கிவரும் மத்திய அரசின் பாக்ட்
நிறுவனத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் திருச்சி குட்ஷெட் பகுதிக்கு
காம்ப்ளக்ஸ் உரம் 515 டன்னும், அமோனியம் சல்பேட் உரம் 815 டன்னும் வந்தன.
இந்த டன் உரம் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திலுள்ள
விவசாயிகளின் தேவைக்காக அனுப்பப்பட உள்ளது. உரங்களை லாரிகள் மூலம்
அனுப்பும் பணியைப் பார்வையிட்ட திருச்சி வேளாண் இணை இயக்குநர் இரா.
சந்திரசேகரன் கூறியது:
காம்ப்ளக்ஸ் உரத்தில் தழை மற்றும் மணிச்சத்து தலா 20 %-மும், கந்தகச்சத்து 13%மும், துத்தநாக சத்து 0.3 %மும் உள்ளது.
நெல் சாகுபடியில் அதிக விளைச்சலைப் பெற பேரூட்டச்
சத்துகளான தழை,மணி,சாம்பல் சத்துடன் தற்பொழுது நுண்ணூட்ட சத்தான
துத்தநாகமும் அவசியம் இட வேண்டிய சூழலில் பேரூட்டச் சத்துடன் 0.3% துத்தநாக
நுண்ணூட்டம் சேர்க்கப்பட்ட காம்பளக்ஸ் உரம் வந்துள்ளது. திருச்சி மாவட்ட
விவசாயிகளுக்கு மட்டும் 360 டன் அளிக்கப்பட உள்ளது.
மண் ஆய்வு முடிவின்படி பரிந்துரை செய்யப்படும் அளவில்
உரத்தை இட்டு மகசூலை பெருக்கிட வேண்டும் என்றார் அவர். ஆய்வின்போது வேளாண்
உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) க. பால்ராஜ்,வேளாண் அலுவலர் இரா.
சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment