வேலுார்:'திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்தால், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும்' என, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 25ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும்; மாலை, 6:00 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பை, சணல் பை அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்துமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மேற்கொண்டுள்ளார்.
தி.மலையில் 'செல்பி'க்கு தடை
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், மகா தீபம் ஏற்றும் மலையில், 'செல்பி' எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலையில், வரும், 25ம் தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீசார், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க, பக்தர்கள், செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment