பயறு வகை பயிர்களில் உற்பத்தியை
அதிகரிக்க அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு முறை செயல்விளக்கத் திடல்களை வேளாண்
உயர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ்
சாத்தூர் வட்டத்தில் உளுந்து மற்றும் பாசிபயறுகளில் உற்பத்தியை
அதிகரிக்கும் பொருட்டு நடப்பாண்டில் சுமார் 1000 ஹெக்டேர் பரப்பில்
ஒத்தையால், ஒ.மேட்டுப்பட்டி, கரிசல்பட்டி, நள்ளி, கோசுகுண்டு, மேலமடை,
போத்திரெட்டிபட்டி, அம்மாபட்டி மற்றும் சூரங்குடி ஆகிய பகுதிகளில் தொகுப்பு
முறை செயல்விளக்கத்திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திடல்களை விருதுநகர்
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கனகராசன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது பயறு வகை பயிர்களில் இரண்டு சதவீத டிஏபி கரைசல் தெளிக்கும்
பணியையும் பார்வையிட்டார். இதன் மூலம் 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதல்
மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இத்திட்டத்தின் கீழ் ஒரு
ஹெக்டேருக்கு ரூபாய் 4000 என்ற அளவில் வழங்கப்பட்ட இடுபொருள்கள் குறித்து
விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் போத்திரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு
பயனாளிகளிக்கு ரூபாய் 47250 மானிய விலையில் வழங்கப்பட்ட ரேட்டோவேட்டர்
(சுழல் கலப்பை) மற்றும் கலிங்கபட்டியில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்
கீழ் ஒரு பயனாளிக்கு 75000 மானிய விலையில் வழங்கபட்ட பவர்டில்லர் மற்றும்
சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி
நிதி திட்டத்தின் கீழ் 47500 மானியத்தில் அமைக்கப்பட்ட ஒருகிணைந்த பண்ணையம்
ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது சாத்தூர் வட்டார வேளாண்மை
உதவி இயக்குநர் சக்கரவர்த்தி, வேளாண்மை அலுவலர் மகாலட்சுமி, துணை வேளாண்மை
அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர்
உடனிருந்தனர்.
No comments:
Post a Comment