Monday, November 2, 2015

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு மீண்டும் நீர் திறப்பு


மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்குக் கால்வாய் பாசனத்துக்கு சனிக்கிழமை மாலை முதல் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்குக் கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், கால்வாய் பாசனப் பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக இரு தினங்களுக்கு முன்பு அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது. தற்போது, பாசனப் பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால், சனிக்கிழமை மாலை முதல் மீண்டும் கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.45 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 6,412 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. காவிரி டெல்டா பாசனம், கிழக்கு, மேற்குக் கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 1,400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 26.54 டி.எம்.சி.
மக்கள் நலக் கூட்டியக்க குறைந்தபட்ச
செயல் திட்டம் இன்று வெளியீடு
மக்கள் நலக் கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்டம் தொடர்பான அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது.
மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கமாக இணைந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலை இணைந்து சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்டத்தைத் தயாரித்துள்ளனர்.
இதை இறுதி செய்து, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திங்கள்கிழமை வெளியிட உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2015/11/02/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/article3109817.ece

No comments:

Post a Comment