விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம்
 பகுதியில் நிலக்கடலை பயிரை சிவப்பு கம்பளிபூச்சி தாக்குதலில் இருந்து 
காக்க வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரி கிருஷ்ணன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
 திருச்சுழி, நரிக்குடி, தொட்டியாங்குளம், 
பொய்யாங்குளம், குறிஞ்சாங்குளம், செம்பட்டி, இலங்கிபட்டி, மணவராயனேந்தல் 
மற்றும் காரியாபட்டி பகுதிகளில் தற்சமயம் நிலகடலை அதிக பரப்பளவில் 
பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிரில்  சிவப்பு கம்பளிப்பூச்சியின் தாக்குதல் 
அதிகளவில் உள்ளது.
 வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் முனைவர் 
பால்பாண்டி மற்றும்  திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி ஆகியோர் உத்தரவின்
 பேரில் குறிஞ்சாங்குளம் பகுதியில் பயிர் பாதுகாப்புத்துறை தொழில்நுட்ப 
வல்லுநர் ராஜேந்திரனுடன் குழுக்களாக சென்று பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் 
ஆய்வு செய்தனர்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 
 நிலக்கடலையில் சிவப்பு கம்பளி பூச்சி தாக்குதல் அதிகம்
 உள்ளது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு நிலக்கடலை மகசூல் 
குறையக்கூடும். இப்பூச்சியை கட்டுப்படுத்த கீழக்கண்ட ஒருங்கிணைந்த பயிர் 
பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வயல்களில் களைகள் 
இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிக்க 
வேண்டும். கண்ணுக்கு தெரிகின்ற முட்டை மற்றும் இளம் பருவ புழுக்களை கையால் 
பொறுக்கி அழித்துவேண்டும். சொக்கப்பான் அல்லது விளக்குபொறி ஏக்கருக்கு 3 
முதல் 4 வரை வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து அழிக்கவேண்டும். 
 வைரஸ் கரைசலை ஒட்டும் திரவத்துடன் கலந்து ஒரு 
ஏக்கருக்கு 300 மிலி என்ற அளவில் தெளிக்கவேண்டும். வேப்ப எண்ணெய் 3 சதம் 
அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சத கரைசலை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க
 வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
 
No comments:
Post a Comment