இந்த மையத்தின் செயல்பாடு கள் குறித்து இஸ்ரேல் துணைத் தூதர் டவ்செகவ் ஸ்டீன்பெர்க் நேற்று ஆய்வு செய்தார்.
வேளாண்
உற்பத்தியை அதிக
ரிக்க விவசாயிகள்
புதிய தொழில்
நுட்பங்களைத் தெரிந்து
கொள்ள வேண்டும்
என இந்தியாவுக்கான
இஸ்ரேல் துணைத்
தூதர் டவ்செகவ்
ஸ்டீன்பெர்க் தெரிவித்தார்.
இஸ்ரேலியத்
தொழில்நுட்பத் தைப்
பயன்படுத்தி, இந்தியாவில்
வேளாண் உற்பத்தியைப்
பெருக்க முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக
காய்கறி, மலர்,
மாங்காய், எலு மிச்சை
உள்ளிட்ட பயிர்
சாகுபடி களுக்கு
என பல்வேறு
மாநிலங் களில்
29 மையங்கள் அமைக்கப்
பட்டுள்ளன.
தமிழகத்தில்
இஸ்ரேலிய தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி, மலர்
சாகுபடியை அதிகரிக்க
தளி யில்
ஒரு மையம்
அமைக்கப் பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்,
ரெட்டியார்சத்திரத்தில் காய்கறி
சாகுபடியை அதிகரிக்க
காய்கறி மகத்துவமையம்
அமைக்கப்பட்டுள் ளது.
இந்த மையத்தில்
மாதிரி வயல்களை
அமைத்து இஸ்ரே
லியத் தொழில்நுட்பத்தை
பயன் படுத்தி
தக்காளி, மிளகாய்,
வெண்டை, கத்தரி
உள்ளிட்ட காய்
கறிகளை பயிரிட்டுள்ளனர்.
இந்த
மையத்தின் செயல்பாடு
கள் குறித்து
இஸ்ரேல் துணைத்
தூதர் டவ்செகவ்
ஸ்டீன்பெர்க் நேற்று
ஆய்வு செய்தார்.
அப்போது
அவர் கூறும்போது,
காய்கறிகளின் உற்பத்தியை
அதிகரிக்க தரமான
விதைகளைத் தயார்
செய்து விவசாயிகளிடம்
கொடுக்கவும், விவசாயிகளிடம்
புதிய தொழில்நுட்பத்தை
அறிமுகப் படுத்தவும்
இந்த மையம்
உதவும்.
சொட்டுநீர்ப்
பாசனம், பாலி
ஹவுஸ், நிலப்போர்வை
ஆகி யவை அமைப்பதன்
மூலம், காய்
கறி உற்பத்தியை
அதிகரிக்க முடியும்.
இஸ்ரேல் தூதரகம்
மூலம் நடத்தப்படும்
கருத்தரங்குகளில் விவசாய
அதிகாரிகள் பங்கேற்று
புதிய தொழில்நுட்பங்கள்
குறித்து தெரிந்துகொள்ள
வேண்டும். அதை விவசாயிகளுக்கு
எடுத்துக்கூற வேண்டும்.
தரமான
விதைகளை உற்பத்தி
செய்து, விவசாயிகளுக்கு
வழங்கு வதன்
மூலம் காய்கறி
உற்பத்தி பெருகும்.
தரமான
காய்கறிகளை விற்பனை
செய்வதன் மூலம்
அதிக விலையும்
கிடைக்கும். இதன்
மூலம் விவசாயிகளின்
பொருளாதாரமும் உயரும்
என்றார்.
ஆய்வின்
போது தோட்டக்
கலைத்துறை மாநில
இணை இயக்குநர்
ராஜாமுகமது, காய்கறி
மகத்துவ மைய திட்ட
அலுவலர் சீனிவாசன்,
ஆட்சியரின் நேர்முக
உதவியாளர் (வேளாண்மை)
கார்த் திகேயன்,
மாவட்ட தோட்டக்கலைத்
துறை துணை
இயக்குநர் ராம நாதன்
உடன் இருந்தனர்._
இஸ்ரேல் தூதருக்கு பலத்த பாதுகாப்பு
திண்டுக்கல்
மாவட்டத்துக்கு இஸ்ரேல்
துணைத் தூதர்
வருகையையொட்டி பலத்த
பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நான்கு வாகனங்களில்
போலீஸார் பைலட்
பாதுகாப்புடன் மதுரையில்
இருந்து உடன்
வந்தனர். காய்கறி
மகத்துவமையம் அமைந்த
பகுதிக்குள் பத்திரிகையாளர்கள்,
அலுவலர்கள் அனைவரும்
முழு சோதனைக்குப்
பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
மையத்தைச்
சுற்றிலும் போலீஸார்
துப்பாக்கியுடன் நின்று
கண்காணிப்புப் பணியில்
ஈடுபட்டனர். மெட்டல்
டிடெக்டர் உள்ளிட்ட
கருவிகளை பயன்படுத்தி,
துணைத் தூதர்
வருவதற்கு முன்பே
போலீஸார் தீவிர
சோதனை நடத்தினர்.
டிஎஸ்பி செல்வம்
தலைமையில் போலீஸார்
பலத்த பாதுகாப்பு
ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/article7903366.ece
No comments:
Post a Comment