Friday, November 20, 2015

உலக உணவு பாதுகாப்பு மையத்துடன் வேளாண்மை பல்கலை. ஒப்பந்தம்



 கோவை, : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், உலக உணவு பாதுகாப்பு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. உலகளவில் 12 பல்கலைக்கழகங்கள் மற்றும் இஸ்ரேலில் உள்ள எரிமலை மையத்தின் வேளாண் ஆராய்ச்சி கழகம் இணைந்த கூட்டமைப்பான, அமெரிக்காவில் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ளது உலக உணவு பாதுகாப்பு மையம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வளரும் நாடுகளின் அறுவடை பின்சார் உணவு இழப்புகளைக் குறைக்கவும், முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலக உணவு பாதுகாப்பு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்.பல்கலையின் முதுகலைப்பட்டப்படிப்பு கல்வியின் முதன்மையா் மோகன் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை அறுவடைக்குப்பின் சேமிக்கும்போது ஏற்படும் பூச்சிகளை கட்டுப்படுத்த பல புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கியதாலும், இவரது முயற்சியாலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் புதிய அறுவடை பின்சார் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment