சென்னை
: 'அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நீடிப்பதால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது:லட்சத் தீவு கடல் பகுதியில், உருவான காற்று அழுத்த தாழ்வு அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கோவை, நீலகிரி, தேனி,
திண்டுக்கல் மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழை நீடிக்கும்.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். நேற்று காலை, 8:30 மணி வரை, தமிழகத்தில், அதிகபட்சமாக நீலகிரியில், 13; திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், நான்கு நாட்களுக்கு மழை
No comments:
Post a Comment