காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நவீன மீன்
குஞ்சு பொறிப்பகம் மூலம் உற்பத்தி செய்த மீன் குஞ்சுகள், விவசாயிகளுக்கு மிகக் குறைந்த
விலையில் விற்பனையை தலைவர் ஆ.சுரேஷ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
விவசாயிகள் மீன் வளர்ப்பில் ஈடுபடும் வகையில்
நவீன மீன் குஞ்சு பொறிப்பகம் அமைக்கப்பட்டு, மீன் குஞ்சு வளர்ப்பு செய்யப்பட்டு வருகிறது.
காரைக்கால் பகுதியில் உள்ள மீன் வளர்ப்பு ஆர்வலர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த மீன் குஞ்சுகள் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மீன் குஞ்சு விற்பனையை வேளாண் அறிவியல் நிலையத்
தலைவர் ஆ.சுரேஷ் தொடங்கிவைத்து பேசியதாவது: இங்குள்ள பொறிப்பகம் மூலம் நன்னீர்
மீன் வளர்ப்பாக, கட்லா, ரோகு, மிர்கால் ரக கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மீன்கள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இதனை வாங்கி லாப மீட்டும் வகையில் தொழில்
செய்ய முன் வரவேண்டும். நிலையத்தில் இதற்காக அளிக்கப்படும் பயிற்சியிலும் விவசாயிகள்
பங்கேற்க வேண்டும் என்றார்.
நிலைய முதல்வர் கோ.விஜயக்குமார் கூறியதாவது: கெண்டை
மீன் வகைகள் 3 இன்ச் அளவில் வளர்ந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தாய் மீனுக்கு
ஊசி போட்டு கருவுறச் செய்யப்படுகிறது. 45 நாள்கள் வளர்ப்பு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
10 முதல் 12 மாதத்தில் 1 முதல் 1.5 கிலோ எடை கொண்டதாக மீன் வளரும் என்றார்.
No comments:
Post a Comment