காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால்
ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவசாயத் துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.
அவர்கள் கணக்கின்படி, காஞ்சிபுரம்
மாவட்டத்தில் உள்ள 466 கிராமங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில்
8,159 ஹெக்டேரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 3,500 ஹெக்டேர் நெல் பயிர்கள்
முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இதேபோல் கரும்பு 350 ஹெக்டரிலும்,
சிறுதானியங்கள் 2 ஹெக்டேரிலும், நிலக்கடலை 10 ஹெக்டேரிலும் சேதம் அடைந்துள்ளன.
வெள்ளச் சேதத்தை கணக்கெடுக்க
அமைக்கப்பட்ட குழுவினர் இந்தச் சேதம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment