திருவள்ளூர் மாவட்டம், சத்தியமூர்த்தி சாகர் (பூண்டி ஏரி)
நீர்த்தேக்கத்தில் மீன் பிடிப்பு உரிமம் 5 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், சத்தியமூர்த்தி சாகர் (பூண்டி ஏரி)
நீர்த் தேக்கத்தில் மீன் பிடிப்பு உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தப் புள்ளி விவரங்கள், ஏல நிபந்தனைகள் குறித்து மீன்வளத் துறை ஆணையர் அலுவலகம், நிர்வாக அலுவலகக் கட்டடங்கள், தேனாம்பேட்டை, சென்னை - 06 என்ற முகவரியில் ரூ. 500 + வாட் வரி (5 சதவீதம்) செலுத்தி நவம்பர் 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்விவரங்களை, இலவசமாக www.tender.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மூடி முத்திரையிட்ட ஒப்பந்தப் புள்ளிகள் மேற்கண்ட முகவரியில் நேரில் அல்லது தபால் மூலமாக வருகிற 13-ஆம் தேதி பகல் 12 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு 044 - 27972457,
24336311 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment