கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியில், தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாளான்று காலை 9 மணிக்கு முன்பாக வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறை அலுவலகத்துக்கு தங்களது சொந்த செலவில் வந்து சேர வேண்டும்.
பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ரூ.250
கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறைத் தலைவரை நேரடியாகவோ, 0422-6611214 என்ற தொலைப்பேசி எண் மூலமாகவே தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment