Monday, November 2, 2015

கறவை மாடு வளர்ப்புக்கான இலவசப் பயிற்சி ஈரோட்டில் நவ. 3-இல் தொடக்கம்


ஈரோட்டில் விஞ்ஞான முறையிலான கறவை மாடு வளர்ப்பு இலவசப் பயிற்சி நவம்பர் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, ஈரோடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர், தலைவர் சனிக்கிழமை விடுத்த செய்தி: ஈரோடு சத்தி சாலையில் வீரப்பன்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 3, 4-ஆம் தேதிகளில் "விஞ்ஞான முறையிலான கறவை மாடு வளர்ப்பு' என்ற தலைப்பில் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், விஞ்ஞான முறையிலான கறவை மாடு வளர்ப்பு குறித்த விரிவான பாடங்கள் நடத்தப்படுவதுடன் கலந்துரையாடல், விடியோ படக்காட்சி, கேள்வி பதில்களும் இடம்பெற உள்ளன.
 பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரிலோ அல்லது 0424-2291482 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment