கோவையில்
உள்ள தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
சிறு தானியங்களிலிருந்து
மதிப்பு கூட்டப்பட்ட
உணவுப் பொருள்கள்
தயாரிக்கும் பயிற்சி
வரும் 24, 25 ஆகிய
தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தப்
பயிற்சியில் பாரம்பரிய
உணவுகள், பிழிதல்,
அடுமனைப் பொருள்கள்,
உடனடி தயார்
நிலை உணவுகள்
என்ற தலைப்புகளில்
விளக்கம், பயிற்சிகள்
வழங்கப்படும். இந்தப்
பயிற்சியில் கலந்து
கொள்ள ஆர்வமுள்ளவர்கள்
ரூ. 1,500 செலுத்தி
தங்களது பெயரை
முன்பதிவு செய்து
கொள்ளலாம். இது குறித்த
மேலும் விவரங்களுக்கு
பேராசிரியர், தலைவர்,
அறுவடை பின்சார்
தொழில்நுட்ப மையம்,
வேளாண் பொறியியல்
கல்லூரி, ஆராய்ச்சி
நிலையம், கோவை
- 3 என்ற முகவரியில்
நேரிலோ, 0422-6611340, 6611268 என்ற
தொலைபேசி எண்ணிலோ
தொடர்பு கொள்ளலாம்.
பெயர்களை
வரும் நவம்பர்
24-ஆம் தேதிக்குள்
பதிவு செய்து
கொள்ள வேண்டும்
என்று பல்கலைக்கழக
செய்திக் குறிப்பு
தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment