ப.வேலூர்: வெங்கமேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ப.வேலூர் அடுத்த, வெங்கமேட்டில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வியாழக்கிழமை தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. இங்கு, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. விற்பனை கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) லோகாம்பாள் தலைமை வகித்தார். இதில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருளீட்டு கடன், உழவர் நல பாதுகாப்புத் திட்டம், சேமிப்பு கிடங்கு வசதி குறித்து விளக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் வெங்கமேடு சேமிப்பு கிடங்கை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment