தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, இரண்டாம் கட்ட நீர்வள, நிலவள திட்டத்திற்கு, 3,000 கோடி ரூபாய் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பாசன வழித்தடங்களை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, 2007 முதல் தமிழகத்தில், நீர்வள, நிலவள திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு உலக வங்கி, 2,544 கோடி ரூபாய் கடனுதவி அளித்தது. பொதுப்பணி, வேளாண் உள்ளிட்ட, எட்டு துறைகள் ஒருங்கிணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்தின. இதனால், திருவண்ணாமலை, வேலுார் உட்பட, தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பல மாவட்டங்கள் பலன் அடைந்தன. இந்த மாவட்டங்களில், நீர்நிலைகளை புனரமைத்தல், நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்குதல், நீர்வழித்தடங்களை மேம்படுத்துதல் உட்பட, பல பணிகள் நடந்தன. ஜூனில் நிறைவு பெற்ற இத்திட்டத்தால், வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதையடுத்து, 'இரண்டாம் கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக, உலக வங்கியிடம், 3,000 கோடி ரூபாய் கடனுதவி பெற திட்டமிடப்பட்டு, அதற்கு, மத்திய அரசும் பரிந்துரை செய்தது.
உலக வங்கியும் கடனுதவி வழங்க சம்மதித்துள்ளதால், திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது.இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரண்டாம் கட்ட நீர்வள, நிலவள திட்டத்திற்கு, உலக வங்கி வழங்க உள்ள நிதியை பயன்படுத்தி, என்னென்ன பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
உலக வங்கி வழங்கும் நிதியை பயன்படுத்தி, ஏற்கனவே விடுபட்ட பல திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிந்ததும், திட்ட பணிகள் வேகம் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment