Monday, November 2, 2015

டெங்குவைத் தடுக்க நிலவேம்பு குடிநீரைப் பருகுவது அவசியம்: மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்


டெங்கு ஏற்படுவதைத் தடுக்க நிலவேம்புக் குடிநீரை பொதுமக்கள் அவசியம் பருக வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் வலியுறுத்தினார்.
 
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் "நமது சென்னை நமக்கே' என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் விக்ரம்கபூர் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு முகாமை தொடக்கி வைத்தார். 
 
இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது டெங்கு பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் சார்பில் நிலவேம்புக் குடிநீர் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்குகிறது. அதை பொதுமக்கள் அவசியம் பருக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
இதைத் தொடர்ந்து திருவான்மியூரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் உலகத் தரம் வாய்ந்த நடைபாதை அமைக்கும் பணியையும், மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் பார்வையிட்டார். அதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பொதுநல சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். அப்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது பற்றியும், தரம் பிரித்து கொடுப்பதன் அவசியம் பற்றியும் பொதுமக்களிடம் விளக்கும்படி பொதுநலச்சங்க பிரதிநிதிகளிடம் விக்ரம் கபூர் வலியுறுத்தினார்.

http://www.dinamani.com/tamilnadu/2015/11/02/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/article3109752.ece

No comments:

Post a Comment