ஈரோடு: ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், அறுவடைக்குப்பின் செய்நேர்த்தி பயிற்சி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் சாத்தப்பன் தலைமை வகித்தார். அறுவடைக்குப்பின், நிலத்தை பண்படுத்துவதால், 30 சதவீத்துக்கு மேல் செலவு குறையும். கூடுதல் மகசூல் கிடைக்கும். மண் வளம் காக்கப்படும். மண்ணில் தண்ணீர் தேங்கும் சக்தி அதிகரிக்கும். உரம், விதைகளின் பயன்பாட்டை குறைக்கலாம், என யோசனை தெரிவிக்கப்பட்டது. தவிர, உழவர் நலத்திட்டங்கள், பொருளீட்டு கடன், குளிர் பதன கிடங்கு பயன்படுத்துதல், விவசாயிகள் குழுக்கள் அமைத்து, அக்குழுவை உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக மாற்றுதல் குறித்து விளக்கப்பட்டது.
No comments:
Post a Comment