Monday, November 2, 2015

பாசனத்துக்காக ஈச்சம்பாடி–கோமுகி அணைகள் நாளை திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, நவ. 3–
முதல்அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதனை ஏற்று, ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும்;
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப்பரப்புகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அந்த வேண்டுகோளினை ஏற்று, கோமுகி அணையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


http://www.maalaimalar.com/2015/11/03094057/Jayalalithaa-announced-opening.html


No comments:

Post a Comment