Monday, November 2, 2015

சவுதியில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி: மக்கள் வியப்புடன் கண்டுகளிப்பு



ரியாத்: சவுதி அரேபியாவின் கமிஸ் முஷைட் நகரில் உள்ள ஒரு பண்ணையில் ஆறு கால்களுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் அச்சரியத்துடன்  பார்த்துச் செல்கின்றனர். சயீத் அல் கட்டானி என்பவருக்கு சொந்தமான அந்த பண்ணையில் சமீபத்தில் ஒரு செம்மறியாடு குட்டிகளை ஈன்றது. 

அதில் ஒரு குட்டி ஆறு கால்களுடன் இருப்பதாக தகவல்கள் வெளியானதும், கமிஸ் முஷைட் நகர மக்களுடன் அக்கம்பக்கத்து நகரங்களில் உள்ளவர்களும் அந்த அதிசய ஆட்டுக்குட்டியை வியப்புடன் பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர். அந்த பண்ணை உரிமையாளர் இதுவரை இதுபோன்ற சம்பவங்களை கண்டதில்லை இதுவே முதல்முறை என்று அந்த உரிமையாளர் கூறியுள்ளார்.


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=176203

No comments:

Post a Comment