பெங்களூரு:விவசாயிகளுக்கு அதிநவீன தொழில் நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 'விவசாய மேளா - 2015' நேற்று துவங்கியது.
மழை பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.
இதனால், விவசாயிகளுக்கு மண், தண்ணீர் சேமிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை அபிவிருத்தி செய்யும் தொழில் நுட்பங்கள், மாற்று எரிபொருள் பயன்படுத்துவது, கால்நடை வளர்ப்பு, விவசாயத்தை லாபகரமான தொழிலாக்குவது உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் 'விவசாய மேளா' நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் விவசாயத்துறை இணைந்து நடத்தும், விவசாய மேளா - 2015, நான்கு நாள் கண்காட்சியை, பல்லாரி சாலையில் உள்ள காந்தி விவசாய விஞ்ஞான கேந்திராவில், கவர்னர் வஜுபாய் வாலா நேற்று துவக்கி வைத்தார்.
விவசாய மேளாவில், 600 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 350 கடைகள், விவசாயம் மற்றும் விவசாய தொழில் நுட்பத்துக்கு தொடர்புடையவை.
அது மட்டுமின்றி கிராமிய தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் குடிசை தொழில், கைத்தறி மற்றும் உணவு பாதுகாப்பு உட்பட பல்வேறு தொழில்களை செய்து வரும் சுயஉதவி குழுக்கள், விவசாயிகள் தாங்கள் தயாரித்துள்ள பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பளிக்க, கிராம சந்தையான, 'ஹள்ளி சந்தே' அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், 'நிபுணர்கள் செல்' அமைக்கப்பட்டு, ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரிசு நிலத்தில் விவசாயம் செய்ய ஏற்ற பயிர்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்
படுத்தி விவசாயம் செய்யும் முறை, ஒருங்கிணைந்த விவசாயம், கோழிப்பண்ணை, தோட்டக்கலை, மீன் வளர்ப்பு போன்றவற்றில் விவசாயிகள் லாபமடைவதற்கான ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேளாவுக்கு மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், நகர மக்கள் உட்பட, 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய மேளாவில் விவசாயத்தில் சாதனை செய்த விவசாயிகள் பாராட்டப்படுவர்.
இங்கு வரும் விவசாயிகள், மக்களின் அனுகூலத்துக்காக, காந்தி விவசாய விஞ்ஞான
கேந்திராவின் நுழைவு வாயிலில் இருந்து, 'விவசாய மேளா' வரை இலவச பஸ் வசதியும், குறைந்த விலையில் உணவு வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment